பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு
nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:03 மணிக்கு ஒரு மெட்ரோ பேருந்தும், SUV வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விபத்து சம்பவத்தை நேரலை செய்ய NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நேரலையின் போதே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகொப்டர் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வாகன நிறுத்தத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.
NBC LOS ANGELES HELICOPTER CRASHES WHILE COVERING METRO BUS CRASH
— Subodh Kumar (@kumarsubodh_) September 16, 2026
An NBC Los Angeles news (KNBC-TV) helicopter reportedly crashed in Chatsworth, California, while covering a Metro bus crash.
Further details on injuries and the circumstances of the helicopter crash are awaited. pic.twitter.com/skIAkYVChe
இந்த விபத்தில், ஹெலிகொப்டர் விமானி, செய்தியாளர், மற்றும் சாலையில் இருந்த நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஹெலிகொப்டர் விழுந்ததில், ஹெலிகொப்டர் மற்றும் அங்குள்ள வாகனங்களில் தீ பற்றியது. அங்கிருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஹெலிகொப்டர் விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையில் ஈடுபடுத்தப்படும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
நேரலையின் போதே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.