NCET நுழைவுத்தேர்வு- விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் காலக்கெடு நீட்டிப்பு
இந்தியாவில் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைகழங்களில் 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த படிப்பில், பிஏ அல்லது பிஎஸ்சி-வுடன் இணைந்து பி.எட்-ம் கற்பிக்கப்படுகிறது.
இதில் சேர்வதற்காக இந்திய அளவில் நுழைவுத்தேர்வில்(NCET) தேர்ச்சி பெற்றாக வேண்டும், இதற்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு வருகிற 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
/ncet.samarth.ac.in/ எனும்வலைதளம் வழியாக ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஜூலை 26, 27-ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |