வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள இந்தியாவின் அந்நியச் செலாவணி
பிப்ரவரி 1 ஆம் திகதி வெளியாகவிருக்கும் நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக, ஜனவரி 23 ஆம் திகதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 709.41 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அந்நிய செலாவணி
இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின் அடிப்படைடில், ஒரு வாரத்திற்கு முன்பு 701.36 பில்லியன் டொலராக இருந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த இரண்டு வாரங்களாக, உள்நாட்டு சந்தைகளில் ரூபாய் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கி அந்நிய செலாவணி பரிமாற்றங்களை மேற்கொண்டதாலும், தங்க இருப்புக்களின் மதிப்பு அதிகரித்ததாலும், அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக உயர்ந்துள்ளது என்றே தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கையிருப்பில் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்களின் (FCA) மதிப்பு ஜனவரி 23 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.367 பில்லியன் டொலர் அதிகரித்து 562.885 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 5.635 பில்லியன் டொலர் அதிகரித்து 123.088 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகளின் (SDRs) மதிப்பு 33 மில்லியன் டொலர் அதிகரித்து 18,737 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
மிகப்பெரிய நாடாக
மத்திய வங்கி தரவுகளின்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான இருப்பு நிலை 18 மில்லியன் டொலர்கள் அதிகரித்து 4.703 பில்லியன் டொலராக உள்ளது.
இதற்கிடையில், நிதியாண்டு 25 இல் 135.4 பில்லியன் டொலரை எட்டிய வரவுடன், வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா தொடர்ந்து முன் வரிசையில் உள்ளது.

உலக நிதி நிலைமைகள் இறுக்கமாக இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து கணிசமான மொத்த முதலீட்டு வரவுகளை ஈர்த்துள்ளது, இது நிதியாண்டு 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5 சதவீதமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |