சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்தை வீழ்த்தும் முனைப்பில் இந்தியா., 229 ஓட்டங்கள் இலக்கு
229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி விளையாடிவருகிறது.
துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணி 49.4 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை எடுத்தது.
நாணய சுழற்சியை வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் தவ்ஹீத் ஹிரிதோய் சதம் அடித்தார். அவர் 118 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார். ஜாகிர் அலி 68 ஓட்டங்கள் எடுத்தார். முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்த விளையாடி வருகிறது.
ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் உள்ளனர். கில் 50 ஓட்டங்களை எட்டியுள்ளார். அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 15-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
விராட் கோலி 22 ஓட்டங்கள் எடுத்தார். ரிஷாத் உசேன் வீசிய பந்தில் சவுமியா சர்க்காரில் சிக்கினார். ரோஹித் சர்மா 41 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். அவர் 261 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
விராட் கோலிக்கு பிறகு அதிவேகமாக 11,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். கோலி தற்போது 14,000 ஒருநாள் ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |