திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கனடாவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார்.
இந்தியாவில் நிச்சயதார்த்தம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார்.
இந்நிலையில், Rashamdeep, அவரது தோழி Harman மற்றும் Harmanஉடைய சகோதரரான Navjot ஆகியோர் தங்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பத்தை அளித்துவிட்டு டெக்ஸி ஒன்றில் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அதிர்ச்சி முடிவு
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென காரின் டயர் ஒன்று வெடிக்க, கட்டுப்பாட்டை இழந்த கார் தூக்கி வீசப்பட்டு உருண்டு சென்று விழுந்துள்ளது.
இந்த விபத்தில் Rashamdeep, அவரது தோழி Harman மற்றும் Harmanஉடைய சகோதரரான Navjot ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
மூன்று பிள்ளைகளை இழந்த பட்டியாலா கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அதுவும், நிச்சயதார்த்தம் முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கான விண்ணப்பமும் அளித்து, நல்ல எதிர்காலத்துக்காக எதிர்பார்த்திருந்த நிலையில் Rashamdeep உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |