இந்தியாவில் மோசமானதாக கருதப்படும் தொழில்: அமெரிக்காவில் துணிச்சலாக இறங்கிய இந்திய இளம்பெண்
இந்தியா போன்ற சில நாடுகளில் குறைவாக பார்க்கப்படும் கஞ்சா தொடர்பான தொழிலில், அமெரிக்காவில் துணிச்சலாக இறங்கியுள்ளார், இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான இளம்பெண் ஒருவர்.
இந்திய அமெரிக்கத் தொழிலதிபர்
இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான அனு (Annu Khot), 2008ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக, அமெரிக்காவின் சிகாகோவில் மருத்துவப் பயன்பாடு மற்றும் கேளிக்கைக்காக கஞ்சா பயன்படுத்தும் மருந்தகம் ஒன்றை வெற்றிகரமாக நடத்திவருகிறார் அனு.
அமெரிக்காவின் 24 மாகாணங்களில் கஞ்சாவை கேளிக்கைக்காக பயன்படுத்துவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகாகோவில் Socíale என்னும் நிறுவனத்தைத் துவக்கி நடத்துவருகிறார் அனு.
சொந்த அனுபவம்
பத்து ஆண்டுகளுக்குமுன் தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலியை அனும்பவித்துக்கொண்டிருந்த அனுவுக்கு, கஞ்சா மருத்துவம் உதவியாக இருந்துள்ளது.
அதேபோல, அவரது உறவினர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வலி மிகுந்த கீமோதெரபி சிகிச்சை பெற்றுகொண்டிருந்தபோது, கஞ்சா சிகிச்சை அவருக்கு பெரிதும் உதவியதைக் கண்ட அனு, கஞ்சா மருந்தகம் என்னும் தொழிலைத் துவங்க முடிவு செய்துள்ளார்.
Instagram/ @annukhot
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் 2023ஆம் ஆண்டுக்கான டாப் 50 பெண் தலைவர்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனு, Asian Pacific Islander Heritage Award என்னும் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |