காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சத்தில் மகள்
கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் காஸா எல்லையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம்
கடந்த ஒருவார காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்களது மகள்.
70 வயதான Judih Weinstein மற்றும் 72 வயதான Gad Haggai ஆகிய இருவருமே, ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல் சம்பவத்தையடுத்து மாயமாகியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி விடிகாலையில் Kibbutz Nir Oz பகுதியில் இவர்கள் இருவரும் நடக்க சென்றுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் அப்பகுதியில் வசித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்தது. சம்பவத்தின் போது குடும்ப உறுப்பினர்களின் WhatsApp குழுவில் பதிவு செய்துள்ள அவர்கள்,
இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர், தம்பதி தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
காயங்களுடன் தப்பியுள்ளதாக
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்துவரும் அவர்களின் மகள் பீதியடைய ஆரம்பித்ததுடன், தொடர்பு கொள்ளக்கூடிய எவரையும் அழைத்து அவர் விசாரித்துள்ளார். இந்த நிலையில், kibbutz அவசர மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்த தகவலில்,
@afp
அந்த தாயார் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், அவரது கணவர் மிக மோசமாக காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் இஸ்ரேல் அதிகாரிகள், கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடமும் தமது பெற்றோர் தொடர்பில் பேசியதாகவும்,
ஆனால் சாதகமான எந்த பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என அந்த மகள் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |