ஜேர்மனியில் வெப்பம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!
ஜேர்மனியில் வெப்பம் தொடர்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
10,000ஐ நெருங்கிய உயிரிழப்புகள்
ஜேர்மனியில், இந்த ஆண்டில் மட்டும், இதுவரையில், வெப்பம் தொடர்பில் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் சுகாதார அமைப்பான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளார்கள்
விடயம் என்னவென்றால், இந்தக் கோடையில் நிலவும் வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகமாகும் என்றும் ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், நாட்டின் பல பகுதிகள், 40 டிகிரி மற்றும் அதற்கு அதிகமான வெப்பம் கொண்ட வெப்ப அலைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |