கிட்டத்தட்ட 40 டன் வெண்ணெய் திரும்பப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள்
முறையாக தகவல் பதிவிடப்படப்படவில்லை என குறிப்பிட்டு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் வெண்ணெய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
FDA அமைப்பின் அறிக்கை
அமெரிக்காவில் மொத்த விற்பனையாளரான காஸ்ட்கோ சுமார் 79,200 பவுண்டுகள் கிர்க்லாண்ட் சிக்னேச்சர் வெண்ணெய் திரும்பப் பெறுகிறது. பால் பொருட்களில் பால் கலந்துள்ளது என்று லேபிள்களில் குறிப்பிடப்படவில்லை என்றே காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் FDA அமைப்பின் அறிக்கையிலும் பால் கலந்துள்ளது என்பதை குறிப்பிடவில்லை என்றே விளக்கமளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் கிர்க்லாண்ட் சிக்னேச்சர் சால்டட் ஸ்வீட் க்ரீம் பட்டரின் 900 கேஸ்கள் மற்றும் 1,300 கிர்க்லாண்ட் சிக்னேச்சர் உப்பு சேர்க்காத இனிப்பு கிரீம் பட்டர் என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வெண்ணெய் அனைத்தும் கான்டினென்டல் டெய்ரி ஃபேசிலிட்டிஸ் தென்மேற்கு எல்எல்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு டெக்சாஸில் விநியோகிக்கப்பட்டது.
19 மாகாண மக்களில்
சமீபகாலமாக அமெரிக்காவில் உணவுப் பொருட்கள் பல திரும்பப் பெறுவது தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக லிஸ்டீரியா பாதிப்பு காரணமாக 10 மில்லியன் பவுண்டுகள் இறைச்சி திரும்பப் பெறப்பட்டது.
தொடர்புடைய இறைச்சியை உணவாக்கிய 19 மாகாண மக்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததுடன் 59 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |