மாத இறுதிக்குள் அதிகரித்த டெங்கு நோயாளிகள் - டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
ஜனவரி மாத இறுதிக்குள் இலங்கையில் கிட்டத்தட்ட 5,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே மாதத்தில் டெங்கு தொடர்பான இரண்டு இறப்புகள் உறுதி செய்யப்பட்டதாக NDCU தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி மாத இறுதிக்குள் 16 அதிக ஆபத்துள்ள டெங்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக NDCU தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 764 பேர் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தில் 674 பேர் டெங்கு நோயாளிகளாகவும், கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் 608 பேர் டெங்கு நோயாளிகளாகவும் பதிவாகியுள்ளனர்.
மேலும், காலி மாவட்டத்தில் இருந்து 315 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 303 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 278 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 201 பேரும் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளதாக NDCU தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.