அறிமுக டி20 போட்டியிலேயே அதிரடி அரைசதம் விளாசிய வீரர்! 2 ரன்னில் த்ரில் வெற்றி
நேபாளம் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நெதர்லாந்து 184
நமீபியா, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது.
இன்று நடந்த இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 184 ஓட்டங்கள் குவித்தது. மைக்கேல் லெவிட் (Michael Levitt) 36 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த இரண்டாவது டச்சு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதேபோல் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சைபிராண்ட் ஏங்கல்பிரட் 49 ஓட்டங்கள் எடுத்து அரைசதத்தினை தவறவிட்டார்.
த்ரில் வெற்றி
அதனைத் தொடர்ந்து துடுப்பாடிய நேபாளம் அணியில் கேப்டன் ரோஹித் பாடேல் (50) மற்றும் திபேந்திர சிங் (63) அரைசதம் விளாசினர். 34 பந்துகளை எதிர்கொண்ட திபேந்திர சிங், 63 ஓட்டங்களில் இருந்தபோது கடைசி ஓவரில் போல்டு ஆனார்.
கடைசி இரண்டு பந்துகளில் நேபாளம் அணி ஒரு ரன்னே எடுத்ததால், 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து த்ரில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |