டி20 உலகக்கிண்ணம்: நேபாளத்தை தூளாக நொறுக்கிய நெதர்லாந்து அணி
டல்லாஸில் நடந்த டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது.
நேற்று நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நேபாளம் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
அணித்தலைவர் ரோஹித் பவுடல் மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் வான் பீக், ப்ரிங்கிலேயின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் நேபாளம் அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரோஹித் பவுடல் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் ப்ரிங்கிலே, வான் பீக் தலா 3 விக்கெட்டுகளும், வான் மீகெரென் மற்றும் லீடே தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கினை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு, நேபாள பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
எனினும் மேக்ஸ் ஓ டௌட் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 48 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
நெதர்லாந்து 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Max O'Dowd's gritty 54* guides the Netherlands to a victory against Nepal in Dallas ?#T20WorldCup | #NEDvNEP | ?: https://t.co/B1xT0kd9Xa pic.twitter.com/SeQZsP8F83
— ICC (@ICC) June 4, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |