முதல்முறையாக டெஸ்ட் விளையாடாத அணியிடம் மரணஅடி வாங்கிய தென் ஆப்பிரிக்கா! 2023 உலகக்கோப்பையில் வியக்க வைத்த போட்டி
தரம்சாலாவில் நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
அணியை மீட்ட ஸ்காட் எட்வர்ட்ஸ்
தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்டதால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் பின்னர் வந்த வீரர்களும் தடுமாறினர்.
AFP
இதனால் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என நெதர்லாந்து தத்தளித்தது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு பக்க பலமாக வான் டெர் மெர்வ் 29 (19) ஓட்டங்களும், ஆர்யன் தட் 23 (9) ஓட்டங்களும் விளாசினர். கடைசிவரை களத்தில் நின்ற எட்வர்ட்ஸ் 78 (69) ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் நெதர்லாந்து 245 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிடி, ஜென்சென் மற்றும் ரபடா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Twitter (@KNCBcricket)
தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டு என்ற நிலையில் அந்த அணி இருந்தபோது, கிளாசென் தனது பங்குக்கு 28 ஓட்டங்கள் எடுத்தார்.
AFP
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் டேவிட் மில்லர் போராடினார். ஆனால் அவரும் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை வெற்றிக்காக போராடிய கேஷவ் மகாராஜ் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
முதல் முறையாக தோல்வி
நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 3 விக்கெட்டுகளும், மீகெரென், மெர்வ் மற்றும் லீட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நடப்பு உலகக்கோப்பையில் சிங்கநடை போட்டு வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு இது மிகப்பெரிய அடியாகும்.
அதேபோல் டெஸ்ட் விளையாடாத அணிக்கு எதிராக முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது.
Twitter (@KNCBcricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |