முகத்தில் தாக்கிய பந்து.. மீண்டு வந்து மிரட்டிய வீரர்! உலகக் கோப்பையில் அபார வெற்றி
மேக்ஸ் ஓ டௌட் தனது 10வது சர்வதேச டி20 அரைசதத்தை விளாசினார்
பாஸ் டி லீடே 4 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
அடிலெய்டில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 117 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 40 ஓட்டங்களும், சியான் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
Netherlands stay in control as Zimbabwe lose three wickets in the Powerplay ?#T20WorldCup | #ZIMvNED | ?: https://t.co/wGbASDnUsj pic.twitter.com/ArWHYaMAbk
— ICC (@ICC) November 2, 2022
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடேவின் முகத்தில் பந்து தாக்கியதில் கடும் காயமுற்றார். மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் இன்று களமிறங்கிய லீடே அபாரமாக பந்து வீசினார். அவர் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Powerplay done!
— ICC (@ICC) November 2, 2022
Netherlands are going steady at 35/1 against Zimbabwe ?#T20WorldCup | #ZIMvNED | ?: https://t.co/wGbASDnUsj pic.twitter.com/alSpiFRgJg
A classy knock from the Netherlands opener ?#T20WorldCup | #ZIMvNED | ?: https://t.co/wGbASDoshR pic.twitter.com/vR5w4XS4Sy
— ICC (@ICC) November 2, 2022
மேக்ஸ் ஓ டௌட் 52 ஓட்டங்களும், டாம் கூப்பர் 32 ஓட்டங்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா மற்றும் முஷரபாணி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Twitter (@ICC)