இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து அணி! பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அதிரடி
டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய மைக்கேல் 28 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித்தலைவர் ஸ்காட் எட்வார்ட்ஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார். ஏஞ்சலோ மேத்யூஸ், வெல்லலகே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலங்கை ஆல்அவுட்
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி இலங்கை அணி 18.5 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அணித்தலைவர் வணிந்து ஹசரங்கா 15 பந்துகளில் 43 ஓட்டங்களும், ஷானகா 20 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாசினர்.
நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுகளும், கைல் க்ளெய்ன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Excellent success ? Our first T20 World Cup Warm-up Match ends with a ??? ???
— Cricket?Netherlands (@KNCBcricket) May 28, 2024
Thanks for your enthusiasm ?#kncbcricket #nordek #t20worldcup #cricket #srivned #outofthisworld pic.twitter.com/eFKtpiY5V6
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |