எண்ணெய் பசை சருமத்திற்கு தீர்வு வேண்டுமா? கடலை மாவை இப்படி பயன்படுத்திலே போதும்
பொதுவாக எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும்.
இதற்காக அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் கடலை மாவை கொண்டே சரி செய்ய முடியும்.
அந்தவகையில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எப்படி கடலைமாவை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
கடலை மாவை பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரம் 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.