பித்தம் சரியாக வேண்டுமா? இதோ சில சித்த மற்றும் பாட்டி வைத்தியங்கள் உங்களுக்காக!
stomach pain
Bile problem
By Kishanthini
பித்தம், வாதம், கபம் இம்மூன்றும் அளவிற்கு அதிகமாக உடலில் இருக்கக் கூடாது. இவற்றில் எதுவொன்று அளவை மீறினாலும், நோய்கள் எட்டிப் பார்த்து விடும்.
எனவே முடிந்தளவு இதற்கு சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அந்தவகையில் பித்தத்தை போக்கும் ஒரு சில சித்த மற்றும் பாட்டி வைத்தியமுறைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
- கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பைத்தியம் மாறும். பித்தம் தணியும்.
- காய்ந்த வேப்பம் பூவை சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிவக்க பொரிந்து சிறிது உப்பு போட்டு பிசைந்து 1 கரண்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
- அரச மரத்தின் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
- செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து, சலித்து வைத்துக்கொண்டு சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு, பித்தம் தணியும்.
- குறைய நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும்.
- தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.
- சிறுவெங்காயத்தைச் சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட பித்தம் குறையும்.
- அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
- சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும்.
- 100 கிராம் உலர்ந்த திராட்சை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர, பித்தம், வாந்தி, வாய் கசப்பு தீரும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து இந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும்.
- திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூள் விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US