உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டுமா? இந்த அற்புத பானத்தை காலையில் குடிச்சாலே போதும்!
தற்போது கொரோனா அச்சுறுத்தும் இந்த காலத்தில் நாம் இயற்கை உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டிய அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பானங்கள் போன்றவற்றை எடுப்பது நல்லது. அதில் அன்றாடம் இயற்கை பொருட்கள் அடங்கிய காபி வகைகள் எடுத்து கொள்வதும் நல்லது.
ஏனெனில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும், அஜீரணத்தை சீராக்கவும், ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது மேலும் பக்கவிளைவுகளும் ஏற்படாது.
அந்தவகையில் காலையில் அருந்தக்கூடிய ஒரு சூப்பரான அற்புத பானம் ஒன்றை எப்படி தயார் செய்லாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
[
- வரமல்லி – 2 ஸ்பூன்
- இஞ்சி – 2 சிறிய துண்டுகள்
- ஏலக்காய் – 2,
- நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.
செய்முறை
முதலில் இஞ்சி,மல்லி, 2 ஏலக்காய் தனித்தனியாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பாலை கொஞ்சம் சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, மல்லி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்தவுடன், கடைசியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடவும்.
அடுத்து இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.
இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான மல்லி காபி தயாராகிவிடும்.
நன்மைகள்
-
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த காபி ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
- சளி வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும்.