பிரித்தானியர்கள் கணிதத்திற்கு எதிரான மனநிலையை மாற்ற வேண்டும்: பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானியர்கள் கணிதத்திற்கு எதிரான மனநிலை குறித்து, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(rishi sunak) இன்று உரை நிகழ்த்தியுள்ளார்.
கணிதத்தின் மீதான மனநிலை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய உரையில், கணிதம் மோசமாக இருப்பதாக கேலி செய்வது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
@twitter
பிரித்தானியாவில் கணிதம் மிகவும் பிரபலமான பாடங்களில் ஒன்றாகும், ஆனால் கணிதத்தை போதுமான அளவு கற்காதவர்களும் நம் நாட்டில் உள்ளனர் என்று அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு கணிதத்தின் மீதான சமூகத்தின் மனப்பான்மை தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
@twitter
அவர் தனது மகள்களிடம் தான் மேலும் கணிதத்தில் பாடம் நடத்த விரும்புவதாகச் சொன்னேன் என கூறியுள்ளார். ஆனால் அவரது மகள்கள் ஆர்வமாக இல்லை என கூறிவிட்டதாக உரையில் பேசியுள்ளார்.
மனநிலை மாற வேண்டும்
"கணிதம் கடினமானது கற்ற முடியாது என்று நாம் நகைச்சுவை செய்கிறோம். 'ஓ கணிதமா, என்னால் அதை படிக்க முடியாது, இது எனக்கானதல்ல’ போன்ற விஷயங்களை சொல்கிறோம், இது ஒரு நகைச்சுவை என எல்லோரும் சிரிக்கிறார்கள். எனவே இந்த கணித எதிர்ப்பு மனநிலையை நாம் மாற்ற வேண்டும்." என ரிஷி சுனக் கூறியுள்ளார்.
மேலும் உரையில், ”ஒவ்வொரு மாணவரும் கணிதத்தை உயர்ந்த தரத்திற்கு படிக்க வேண்டியதில்லை” என்று வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் கணிதத்தை எவ்வாறு அதிகம் கற்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் குழுவை அமைக்கவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
@gettyimages
"எதிர்காலத்தில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டிய முக்கிய கணித உள்ளடக்கம் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க, கணிதவியலாளர்கள், கல்வித் தலைவர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அடங்கிய புதிய ஆலோசனைக் குழு நிறுவப்படும்.
நாட்டில், 16-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கணிதத் தகுதி தேவையா என்பது குறித்தும் குழு ஆலோசனை வழங்கும்" என்று சுனக் தெரிவித்துள்ளார்.
சிலரது கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தொடக்கப் பள்ளிகளில் கணிதம் கற்பிக்கும் நம்பிக்கையை ஆசிரியர்களுக்கு வழங்க அரசு விரும்புவதாக கூறியுள்ளார்.
Maths is as important to the creative sector as it is to finance. Watch LIVE my vision for Maths to 18. https://t.co/LiCL7jiOSu
— Rishi Sunak (@RishiSunak) April 17, 2023
"இதை அரசு சரியாக செய்தால், பிரித்தானிய இளைஞர்களுக்காக அரசு உண்மையிலேயே சிறப்பான ஒன்றை செய்யும். அது அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும்." என பேசியுள்ளார்.