முகத்தை கலராக்க மாற்ற வேண்டுமா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க
Beauty Tips
Skin Problem
By Kishanthini
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது.
எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும நிறத்தை இயற்கை முறையில் அதிகரிக்க உதவுகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என இங்கே பார்ப்போம்.
- எலுமிச்சை சாறில் தயிர் சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ முகத்தின் கருமை நீங்கி பொலிவாகவும் கலராகவும் மாற ஆரம்பிக்கும்.
- ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய விடுங்கள்.
இது உலர உலர பீல் ஆஃப் மாஸ்க் போல இருக்கும். அந்த மாஸ்க்கை நீங்கிவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வந்தாலே சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதை உணர்வீர்கள்.
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி உலர விடுங்கள்.
நன்கு உலர்ந்ததும் முகத்தில் லேசாக இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வாருங்கள்.
வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
- 2 ஸ்பூன் பாலில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காட்டன் கொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்துவிட்டு வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து விட்டு பின் உலர விடுங்கள்.
15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவலாம். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருந்திட்டுக்களும் கருமையும் நீங்கி, முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
- எலுமிச்சை சாறுடன் சிறிது பால் பவுடர் அல்லது மில்க் க்ரீம் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை இரவில் தூங்கும்போது முகத்தில் தடவி, உலர விடுங்கள். பின்பு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர, சருமத்தின் நிறம் மேம்பட ஆரம்பிக்கும்.
- எலுமிச்சை சாறினை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள்.
பின்னர் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ முகத்தில் உள்ள பருக்கள் குறையும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US