ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்
நமது உடலில் உள்ள இரத்தம் இயற்கையாகவே சுத்திரிக்கப்பட்டாலும், நாம் உண்ணும் சிலவகை உணவுகளால் அது அசுத்தமாகி விடுகிறது.
உடலில் உள்ள இரத்தத்தை சில உணவுப் பொருட்களின் மூலமாக ஒரே வாரத்தில் சுத்தம் செய்ய முடியும்.
அவகேடோ பழம்
அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த நாளங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதற்கு காரணம் அதில் உள்ள க்ளுடாதியோன் தான்.
ஆப்பிள்
ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் தரும். இது, அஜீரணத்தைக் குறைத்து, ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆப்பிளின் தோலில், பெக்டின் எனும் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை வெளியேற்றும்.
பூண்டு
பூண்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. பூண்டில் உள்ள அல்லிசின் எனும் பொருள், ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறது. பூண்டை உணவில் சேர்ப்பதோடு, தினமும் ஒன்றை பச்சையாக சாப்பிட வேண்டும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் அதிகமாகவும், வைட்டமின்கள் ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. எனவே, இது ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓட விட உதவும்.
பச்சை இலைக் காய்கறிகள்
இவற்றில் ஏராளமான அளவில் குளோரோபில் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். மேலும், இவை கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவதால், இவற்றை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.