உடலின் இந்த பாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் பிரச்சினைதான்: மருத்துவர்கள் எச்சரிக்கை
குளிப்பதன் மூலம் நாம் நமது உடலை சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் என்றாலும், அதிகம் கவனம் செலுத்தப்படாத உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லையென்றால், விரும்பத்தகாத ஒரு விளைவு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த பாகம், தொப்புள்!
தொப்புளை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஆபத்து
தொப்புளை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால், துர்நாற்றம் வீசக்கூடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக, நான் அதைச் சொல்லவில்லை என்கிறார் Dr கீதா யாதவ் (Dr Geeta Yadav).
உங்கள் தொப்புள் துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் நீங்கள் உங்கள் தொப்புளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று அர்த்தம். பிரச்சினை நாற்றம் மட்டுமல்ல, அதை அப்படியே விட்டால், umbolith அல்லது navel stone என்னும் தொப்புள் கல் என்னும் பிரச்சினை உருவாகிவிடும் என்கிறார் Dr கீதா.
Dr Ajayi-Sotubo என்பவரோ, நீங்கள் உங்கள் தொப்புளை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால், சிவப்புப்புள்ளிகள் முதல் கிருமித் தொற்றுக்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்.
தினமும் குளிக்கும்போது தொப்புளை சுத்தம் செய்வதுடன், வாரத்தில் ஒரு நாள் கவனம் செலுத்தி தொப்புளை சுத்தம் செய்யவேண்டும் என்று கூறும் அவர், சிலருக்கு தொப்புள் ஆழமாக இருக்கும், அவர்கள், ஈரமான cotton bud ஒன்றின் மூலம் தொப்புளை சுத்தம் செய்யலாம் என்கிறார். அத்துடன், அறுவை சிகிச்சையின்போது நாங்கள் அப்படித்தான் சுத்தம் செய்வோம் என்றும் கூறுகிறார் அவர்.
@geetayadavmd Does your belly button smell? Well, you could have an umbolith or nave stone. Want to prevent this? Please wash your belly buttons. #bellybutton #umbilicus #umbolith #omphalolith #navelstone #hygiene #skintips #skincaretips #dermatologist #greenscreen ♬ original sound - Dr. Geeta Yadav
இந்த வீடியோவைப் பார்வையிட்ட பெண் ஒருவர், நான் வழக்கமாக என்னுடைய மற்றும் என் பிள்ளைகளுடைய தொப்புளை சுத்தம் செய்வதுண்டு. அவர்கள் வளர்ந்த பிறகும், அவர்கள் தொப்புளை சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்களை அறிவுறுத்துவதுண்டு. அப்போதெல்லாம், அவர்கள், இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று நினைப்பதுண்டு. இப்போது இந்த வீடியோவை அவர்கள் பார்த்தால், அவர்கள் எனக்கு நன்றி சொல்வார்கள். ஏனென்றால், தொப்புளை சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்துக்கு நல்லது என்று மருத்துவர்களே கூறியுள்ளார்களே என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |