ஊசியே இல்லாத கோவிட்-19 தடுப்பூசி! பிரித்தானியாவில் சோதனை தொடக்கம்
பிரித்தானியாவில் ஊசி இல்லாத கோவிட்-19 தடுப்பூசி சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் எதிர்காலத்தில் வரவிருக்கும் புதிய கோவிட் மாறுபாடுகளுக்கு எதிராக மனிதர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பிபிசியின் அறிக்கையின்படி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் DIOSynVax-ன் CEO ஜோனாதன் ஹீனி (Jonathan Heeney) இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளார்.
தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (NIHR) சவுத்தாம்ப்டன் மருத்துவ ஆராய்ச்சியில் நடக்கவுள்ள இந்த ஆய்வில், 18 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பங்கேற்பார்கள் பங்கேற்கவுள்ளனர்.
புதிய மாறுபாடுகள் தோன்றி, நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் போது, கோவிட்-க்கு எதிரான பாதுகாப்பிற்கு சிறந்த முறைகள் தேவை என்று பேராசிரியர் ஹீனி கூறினார்.
நோயை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தடுப்பூசி, COVID மாறுபாடுகளுக்கு எதிராக கணிசமான அளவு பரந்த பாதுகாப்பை அளிக்கும் என்று அவர் கூறுகிறார்.
அடுத்த வைரஸ் அச்சுறுத்தல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் புதிய தலைமுறை தடுப்பூசிகளை தொடர்ந்து உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த தடுப்பூசியானது, ஸ்பிரிங்-இயங்கும் ஜெட் ஊசி (spring-powered jet injection) மூலம் தோலில் செலுத்தப்படுகிறது, இது ஊசிகளுக்கு பயப்படுபவர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்குகிறது.
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த சோதனை முறைகளுக்காக தேடப்படுகிறார்கள். இந்த சோதனைக்கு, அவர்கள் முதல் இரண்டு COVID-19 தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும்.