உடல் எடையை குறைக்க ரொம்ப சிரமப்பட வேண்டாம்! இது மட்டும் போதும்
இன்றைக்கு பலரையும் வாட்டிவதைக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது உடற்பருமன்.
உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒருசிலருக்கு பலனில்லாமல் போகிறது.
அவர்களுக்கான அற்புதமான தீர்வு தான் “வேப்பம் பூ”.
வேப்பம் பூவின் நன்மைகள்
சிறு கசப்பு தன்மையுடன் காணப்படும் வேப்பம் பூவிற்கு செரிமானத்தை அதிகப்படுத்தும் சக்தி உண்டு, இதில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளன.
குடல் இயக்கத்தை சரிசெய்வதுடன், பசியை கட்டுப்படுத்துவதால் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உடலில் இருந்து வெளியேறும்.
எப்படி சாப்பிடலாம்?
வேப்பம் பூவை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாப்பிடும்போது வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குணமாக்கும்.
வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
இதேபோன்று தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.
உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் போது புதிதாக மரத்திலிருந்து பறித்த வேப்பம்பூக்களை பயன்படுத்துவதே சிறந்தது.