கட்டுக்கடங்காமல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
கட்டுக்கடங்காமல் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேப்ப எண்ணெய் பெரிதளவில் பயன்படுத்துகிறது.
கூந்தலுக்கு வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெய் என்பது வேப்பஞ்செடியின் பழத்தை அழுத்தும் போது கிடைக்கும் கொட்டையை காய வைத்து அதில் இருந்து எடுக்கப்படுவதாகும்.
வேப்ப எண்ணெயில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை முடி மற்றும் தோல் இரண்டையும் பராமரிக்க பயன்படுகிறது.
மேலும், இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
கிடைக்கும் பயன்கள்
வேப்ப எண்ணெயை கைகளின் விரல் நுனியில் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும். இப்படி செய்யும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மேலும் வேப்ப எண்ணெயை உச்சந்தலை குளிரும் வகையில் கூந்தல் முழுக்க தடவி மசாஜ் செய்யவும். வாரம் 2- 3 முறை இப்படி பயன்படுத்தி வரலாம்.
வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி நேரம் மசாஜ் செய்தால் பொடுகு தொல்லை இருக்காது.
குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பு மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டால் உச்சந்தலை குளிர்ந்து பொடுகு தொல்லை குறையும்.
வேப்ப எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் இருப்பதால் இது தலை முடியை சீரமைத்து முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவுகிறது.
தலையில் ஏற்படும் காயங்கள், அழற்சி மற்றும் பேன் தொல்லைகளை சரி செய்ய வேப்ப எண்ணையை உச்சந்தலையில் தடவி பின் வெந்நீரில் குளித்து லேசான துணிகளை வைத்து தலையை மசாஜ் செய்யலாம்.
தலைமுடி வேர்கள் மயிர் கால்களை வலுப்படுத்த முடி உடைவதை குறைக்க வேப்ப எண்ணெயை தினசரி தொடர்ந்து பயன்படுத்திவரலாம்.
தலைமுடி நரைத்துப் போவதை தடுக்க வேப்ப எண்ணெயை காலையில் குளிக்கும் போது தலையில் தடவி வெந்நீரில் குளித்தால் பலனளிக்கும்.
வேப்ப இலைகளை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரில் நீங்கள் குளிக்கலாம் இப்படி வாரம் 2 முறை குளித்து வந்தால் முடி வளர்ச்சி மேம்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |