இரண்டே போட்டிதான், இவரைத்தான் உலகின் சிறந்த வீரரென்று கூறினீர்களா? பட்லரை விமர்சித்த வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பட்லர் இரண்டு போட்டிகளில் ஓட்டங்கள் எடுக்காததை, நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் விமர்சித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து துடுப்பாட்டத்தில் மிரட்டி வந்த ஜோஸ் பட்லர், இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
PC: Twitter
இரண்டாவது போட்டியில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இந்த நிலையில், பட்லரை விமர்சித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், 'முதல் போட்டியில் 0, 2வது போட்டியில் 4 ஓட்டங்கள். இந்த இரண்டு போட்டிகள் கூறிவிட்டது. இவர் தான் உலகின் சிறந்த வீரர். வேறு எதைப்பற்றியாவது பேசலாம்' என சிரிக்கும் எமோஜியை சேர்த்து மோசமாக விமர்சித்துள்ளார்.
He’s the best player in the world, it’s two innings. Talk about something else ? https://t.co/QZBMNWyYUB
— Jimmy Neesham (@JimmyNeesh) July 9, 2022
PC: Getty Images