மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது
நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.
தர்மபுரியை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்களுடன் 3வது இடமும் பிடித்துள்ளனர்.
பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |