நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 7ம் தேதி இந்தியா முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தியது.
இதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
யூன் மாதத்தின் முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தெரியவரும் என்றும், இதனை http://www.neet.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலம் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முடிவுகள் வெளியான பின்னரே தங்களது எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பதால் மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.