விஸ்வரூபம் எடுத்த நீட் தேர்வில் மாணவிகள் அவமானகரமான நிகழ்வை சந்தித்த விவகாரம்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்ற சொன்ன விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது. அந்த வகையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற நிலை பல மாணவிகளுக்கு ஏற்பட்டதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்ததோடு, மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை, குறிப்பிட்ட இந்த தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த புகார் கற்பனையானது என்றும் தவறான நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டது என்று கொல்லத்தில் உள்ள நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் தேசிய தேர்வு முகமையிடம் தெரிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாகக் கூறப்பட்டவர்கள் மீது கேரள பொலிசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கழற்றச் சொன்னதாக 5 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதிய நிலையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த சூழலில் கொல்லம் மாவட்டம் ஆயூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது இந்த அவமானகரமான நிகழ்வை சந்தித்ததாக மாணவி ஒருவர் பொலிசில் புகார் அளித்து உள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 [பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்] மற்றும் 509 [ஒரு பெண்ணின் அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை செய்தல்] ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெண் அதிகாரிகள் குழு சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த் குற்ற செயலில் ஈடுபட்ட பொலிசார் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் தெர்வித்தனர்.
மேலும் கொல்லத்தில் வெடித்த சர்ச்சை குறித்து உரிய விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.