நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்: பாஜகவை காட்டமாக விமர்சித்த தமிழக முதலமைச்சர்
பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்ற பாஜகவின் அறிவிப்பின் மூலம் நீட் தேர்வு அர்த்தமற்றது என்பதை, பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு
கடந்த ஜூலை 27 ஆம் திகதி முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய நிலையில், அதற்கான 3 சுற்றுகள் தற்போது வரை நடந்து முடிந்துள்ளது.
இதில் , இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதனால், தனியார் கல்லூரிகளில் உள்ள காலியான இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவ கலந்தாய்வு அறிவித்தது. இதன் மூலம், நீட் தேர்வால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது என்ற விமர்சனங்கள் உண்மையாகியுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் கூறியது
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், "நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது! முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கட் ஆப் பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வு அர்த்தமற்றது என்பதை பாஜகவினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது. நீட் தேர்வுக்கும், தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம்.
இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை. விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2023
By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |