நீட் தேர்வில் 100% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது எப்படி? சாதனை மாணவன் பிரபஞ்சன் பேட்டி
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த சாதனைப் படைத்த தமிழக மாணவர் பிரபஞ்சன் சுவாரஸ்யத் தகவலை பகிர்ந்துள்ளார்.
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பிரபஞ்சன்
எப்படி நீட் தேர்வில் சாதனைப் படைத்தது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
படிப்பும், பொழுதுபோக்கும் சம அளவில் இருக்க வேண்டும். இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னுடைய கடின உழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று. திட்டமிட்டு படித்தேன். 100 சதவீதம் மதிப்பெண் பெற்றேன். பயிற்சி செய்தேன், வெற்றி சாத்தியமாகியது. முயன்றால் முடியாது ஒன்றுமில்லை.
நீட் தேர்வு ரொம்ப ஈஸி கிடையாது. அத்தேர்வு ரொம்ப கடினம். முதலில் நமக்கு தன்னம்பிக்கை வேண்டும். எனக்கு சின்ன வயது முதல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. உயிரியல் பாடம் பிடித்ததால் படித்தேன். நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெறுவேன் என்று நிச்சயமாக எதிர்பார்க்கவே இல்லை.
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களையெல்லாம் கேட்பேன். செல்போனில் கேம் விளையாடுவேன். படிப்பையும், பொழுதுபோக்கு இரண்டையும் நான் சம அளவில் எடுத்துக் கொண்டேன். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படித்திருக்கிறேன். எனக்கு அந்த நாவலில் கல்கியின் வருணனை ரொம்ப பிடிக்கும். நான் பிற்காலத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே என் ஆசை என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |