நீதா அம்பானி குடிக்கும் போத்தல் தண்ணீரின் விலை ரூ 49 லட்சமா? முழுமையான பின்னணி
பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை பலமுறை பத்திரிகை செய்தியாகியுள்ளது.
உயர் ரக குடிநீர்
சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், நீதா அம்பானி தங்கம் கரைக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த குடிநீரை சுவைப்பதாக கூறி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் அந்த குடிநீரின் பெயர் Acqua di Cristallo Tributo a Modigliani. மிகப் பிரபலமான கலைஞர் Fernando Altamirano என்பவரால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு போத்தலில் இந்த உயர் ரக குடிநீர் சந்தைப்படுத்தப்படுகிறது.
பிரான்சில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்தும் பிஜியில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிப்பாறைகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட புனிதமான நீரில் தங்கத்தை கரைத்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இந்த குடிநீரின் ஒவ்வொரு போத்தலும் 60,000 அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ 49 லட்சம்) விலையில் விற்கப்படுகிறது. குறித்த தண்ணீரை சுவைப்பதாலையே, நீதா அம்பானி 60 வயது கடந்தும் தோல் சுருக்கம் ஏற்படாமல் முகம் பொலிவாக காணப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
ரூ 1.5 கோடி மதிப்பிலான தேநீர்
Acqua di Cristallo Tributo a Modigliani குடிநீருக்கு உலகின் மிக விலையுயர்ந்த குடிநீர் என்ற கின்னஸ் சாதனையும் உள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், 750 மில்லி கொள்ளளவு கொண்ட இந்த போத்தலானது 24 காரட் தங்கத்தாலானது என்றும், 5 கிராம் அளவுக்கு தங்கத்தை குடிநீரில் கலந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், நீதா அம்பானி தொடர்பில் வெளியான புகைப்படம் உண்மை இல்லை என்றும், ஆனால் ரூ 1.5 கோடி மதிப்பிலான ஜப்பான் தயாரிப்பு தேநீர் அருந்துபவர் என்பதால், ரூ 49 லட்சத்திற்கான குடிநீரும் அவர் பருக வாய்ப்புள்ளதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |