மனைவியாக வாழ ரூ.25 லட்சம் சம்பளம்! தமிழ் திரைப்பட நடிகை ஷாக்கிங் தகவல்
தன்னுடன் மனைவியாக வாழ ரூ 25 லட்சம் சம்பளம் தருகிறேன் என பிரபல தொழில் அதிபர் சொன்னதாக நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார்.
தமிழில் யாவரும் நலம், ஆதிபகவன், தீராத விளையாட்டு பிள்ளை, சேட்டை, சிங்கம் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நீத்து சந்திரா.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. நீத்து கூறுகையில், என்னுடைய கதை ஒரு வெற்றி பெற்ற நடிகையின் தோல்வியடைந்த கதை. ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் வந்து, அவருடன் சம்பளத்திற்கு மனைவியாக இருக்க, மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன் என்றார்.
ஒரு பிரபல இயக்குனர், அவருடைய பெயரை வெளியிட நான் விரும்பவில்லை. ஆடிசனுக்கு என்னை கூப்பிட்டு விட்டு ஒரு மணிநேரத்தில் நிராகரித்து விட்டார். என்னை நிராகரிப்பதற்காகவே அவர் ஆடிசனுக்கு அழைத்து உள்ளார்.
அதனால், எனது நம்பிக்கை உடைந்து போகட்டும் என்ற நோக்கில் அவர் அப்படி செய்துள்ளார் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.