நீயா நானா கோபிநாத்தின் சொத்துமதிப்பு.., ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா?
கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இவர் தொகுத்து வழங்கியதில் நீயா நானா, விஜய் விருதுகள், குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?, உன்னால் முடியும் ஆகியவை சில முக்கியமான நிகழ்ச்சிகள்.
ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வரும் இவர் தெருவெல்லாம் தேவதைகள்,ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!, நேர் நேர் தேமா, நீயும் நானும் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேடை பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட கோபிநாத் விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளராக பார்க்கப்படுகிறார்.
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை கோபி காலத்திற்கு ஏற்றார் போல நிகழ்ச்சியின் தலைப்புகளை, விவாதங்களை மாற்றியமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் முதல் எபிசோடில் இருந்து இன்று வரை தொகுப்பாளராக இருக்கிறார் என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு.
இந்நிலையில் தற்போது இணையத்தில் கோபிநாத் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அவரின் முழு சொத்து மதிப்பு 1 முதல் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 கோடி வரை) என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |