சமையல் செய்யும்போது எழுந்த சத்தம்: பக்கத்து வீட்டுக்காரரை பளாரென அறைந்த முதியவர்
ஜேர்மனியில், சமையல் செய்யும்போது எழுந்த சத்தம் முதியவர் ஒருவரை எரிச்சலூட்ட, அவர் சமையல் செய்துகொண்டிருந்த தன் மக்கத்து வீட்டுக்காரரை பளாரென அறைய, கடைசியில் பொலிசார் வந்து அந்த சண்டையில் தலையிடவேண்டியதாகியிருக்கிறது.
சமையல் செய்யும்போது எழுந்த சத்தம்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Geiselhöring நகரில் சனிக்கிழமை மாலை ஒருவர் தன் வீட்டில் schnitzel என்னும் உணவை சமைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

விடயம் என்னவென்றால், இந்த schnitzel சமைக்க, இறைச்சியை ஒரு சுத்தியல் போன்ற கருவியால் அடித்து மென்மையாக்கவேண்டும்.
ஆக, அந்த நபர் இறைச்சியை சுத்தியலால் அடித்துக்கொண்டிருக்க, அதனால் எழுந்த சத்தம் அவரது பக்கத்து வீட்டில் வாழ்ந்த முதியவரை எரிச்சலூட்டியுள்ளது.
கோபத்தில் அவர் பக்கத்து வீட்டுக்குச் சென்று, சமையல் செய்துகொண்டிருந்தவரை மோசமாக திட்டயதுடன், அவரது கன்னத்தில் பளாரென ஒரு அறையும் விட்டிருக்கிறார்.
அங்கு நடந்ததைக் கண்டவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, இரவு 10.00 மணியிலிருந்து காலை 6.00 மணி வரை மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சத்தம் எழுப்புவது சட்டப்படி குற்றமாகும்.
ஆனால், சமையல் செய்த அந்த நபர், அமைதியாக இருக்கவேண்டிய நேரத்தில் சத்தம் எழுப்பினாரா, தவறு அவர் தரப்பிலா அல்லது சமையல் செய்தவரை அந்த முதியவர் அறைந்ததால் தவறு அந்த முதியவர் மீதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.