பிரித்தானியாவில் தீ விபத்தில் கொல்லப்பட்ட தாயாரும் இரு குழந்தைகளும்: விசாரணையில் அம்பலமான சதி
பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம் பகுதியில் தீ விபத்தில் சிக்கி தாயாரும் இரு பிஞ்சு குழந்தைகளும் பலியான சம்பவத்தில், அண்டை வீட்டு நபர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தாயாரும் இரு பிஞ்சு குழந்தைகளும்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிங்ஹாம் பகுதியில் குடியிருப்பு ஒன்று தீயில் சிக்கிய சம்பவத்தில் 28 வயதான 3 பிள்ளைகளின் தாயாரும் அவரது இரு பிஞ்சு குழந்தைகளும் பரிதாபமாக பலியானார்கள்.
@PA
நள்ளிரவு சுமார் 3.17 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜேமி பாரோ என்பவர் தற்போது கொலை குற்றத்தை ஏற்றுள்ளார், ஆனால் படுகொலை செய்யவில்லை என மறுத்துள்ளார்.
இருப்பினும், 31 வயதான ஜேமி பாரோ மீது மூன்று பிரிவுகளில் கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது. இளம் தாயாரும் இரு பிள்ளைகளும் தீ விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
@PA
மிக விரைவில் அந்த குடும்பம் அமெரிக்காவுக்கு குடியேற இருந்த நிலையிலேயே தீ விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர். மனைவியும் இரு பிள்ளைகளும் பலியான தகவல் அறிந்து அமெரிக்காவில் பணியாற்றி வந்த Drammeh நாட்டிங்ஹாம் திரும்பியதுடன், ஃபத்தூமத்தாவையும், எங்கள் இரு மகள்களையும் இவ்வளவு சோகமான முறையில் இழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றார்.
@PA