Wagner Retirement: அறிவிப்பின்போது கண்ணீர்விட்டு அழுத மூத்த வீரர்
நியூசிலாந்தின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நீல் வாக்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நீல் வாக்னர்
2012ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் (Neil Wagner).
மிரட்டலான இடதுக்கை வேகப்பந்துவீச்சாளரான இவர், 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சு 7/39 ஆகும்.
இந்த நிலையில், 37 வயதான வாக்னரின் 12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது. அவர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
நீல் வாக்னர் ஓய்வு குறித்து அறிவித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அவர் இந்த முடிவு எளிதானது அல்ல என்றும், ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம் என்றும் குறிப்பிட்டார்.
ஓய்வு
மேலும் ஊடகத்திடம் பேசிய அவர் கூறுகையில், ''நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்.
இன்று நான் இருக்கும் இடத்தில பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது அணியினர் எப்போதும் எனக்கு உலகத்தையே குறிப்பவர்கள் மற்றும் நான் எப்போதும் செய்ய விரும்புவது அணிக்கு சிறந்தது - அதுதான் நான் விட்டுச் செல்லும் மரபு என்று நம்புகிறேன்'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |