தித்திக்கும் சுவையில் நேந்திரம் பழ பாயாசம்.., எப்படி செய்வது?
கேரளா உணவுகள் என்றாலே நாம் அனைவரும் விரும்பி உண்ணுவோம்.
அந்தவகையில், கேரளாவின் பிரபலமான நேந்திரம் பழ பாயாசம் இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நேந்திரம் பழம்- 4
- தேங்காய்- 1
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
- முந்திரி- 10
செய்முறை
முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நேந்திரம் பழங்களை 15 நிமிடமே வேகவைத்து எடுத்து ஆறவைத்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் வாணலில் நெய் சேர்த்து மசித்த பழத்தை சேர்த்து வதக்கி தொடர்ந்து அதில் வெல்லம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அதில் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் வறுத்த தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான நேந்திரம் பழ பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |