26 ஓட்டங்களுக்கு சுருண்ட நேபாளம்: 306 ரன் வித்தியாசத்தில்..இந்தியா ஏ இமாலய வெற்றி
India A beat nepal by 306 runs: இந்தியா ஏ அணி 306 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
ஆடவர் ஆசியக் கிண்ணம் ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில், நேபாளத்தை 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணி 332 ஓட்டங்கள்
இந்தியா ஏ மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆடவர் ஆசியக் கிண்ணம் ரைசிங் ஸ்டார்ஸ் போட்டி தோதாவில் நடந்தது.

முதலில் ஆடிய இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 332 ஓட்டங்கள் குவித்தது. குமார் குஷாக்ரா 117 ஓட்டங்களும், திலக் வர்மா 107 ஓட்டங்களும் விளாசினர்.
சூர்யன்ஷ் ஷேட்ஜ் 14 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். லலித் ராஜ்பன்ஷி, சந்தீப் லமிச்சேன் தலா 3 விக்கெட்டுகளும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளும், பவன் சர்ரப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நேபாள அணி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணாவின் மிரட்டலான பந்துவீச்சில் 11.3 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்தியா ஏ அணி 306 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

