26 பந்தில் 50 ரன் விளாசிய கேப்டன்..ஆனால் நூலிழையில் தோல்வி
முத்தரப்பு டி20 தொடரில் நேபாளம் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியது.
குஷால் மல்லா அரைசதம்
நேபாளம், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரின் 4வது போட்டி இன்று நடந்தது. இதில் நேபாளம் மற்றும் நமீபியா அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது நமீபியா. அதன்படி களமிறங்கிய நேபாளம் அணி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
A fantastic batting display from Nepal as they set Namibia a target of 181 ?
— ICC (@ICC) March 1, 2024
?: @CricketNep#NEPvNAM ?: https://t.co/ER7vISl1Dy pic.twitter.com/BZcpAHceUK
அடுத்து வந்த குல்சன் ஜா 16 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் ஆரிஃப் ஷேய்க் 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குஷால் மல்லா அதிரடியில் மிரட்டினார். கடைசிவரை களத்தில் நின்ற அவர் 37 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.
நேபாளம் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் குவித்தது. பென் ஷிக்கோங்கோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கேப்டன் ஜேஜே ஸ்மிட் அதிரடி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நமீபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் 10 ஓட்டங்களிலும், மலான் க்ரூகர் 3 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்து 25 ஓட்டங்கள் விளாசிய ஜேபி கோட்சி ஆட்டமிழக்க, கேப்டன் ஜேஜே ஸ்மிட் மற்றும் ஜேன் பிரிலின்க் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதன்மூலம் நமீபியா 15 ஓவர்களில் 133 ஓட்டங்கள் எடுத்தது. அரைசதம் விளாசிய ஜேஜே ஸ்மிட் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த ஈட்டன் முதல் பந்தியிலேயே ஜோராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நமீபியா அணி விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றியை நோக்கி பயணித்தது. பிரிலின்க் 37 (29) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஸனே கிரீன் வெற்றிக்காக போராடினார்.
கடைசி ஓவரில் நமீபியா வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரி கரண் கேசி மிக துல்லியமாக வீசினார். முதல் நான்கு பந்துகளில் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், 5வது பந்தில் டிரம்பல்மேனை வெளியேற்றினார்.
Some quality death bowling has given Nepal their first win in the T20I Tri Series! #NEPvNAM #ACC pic.twitter.com/efuCmqAerx
— AsianCricketCouncil (@ACCMedia1) March 1, 2024
6வது பந்தில் ஸ்சோல்ட்ஸ் பவுண்டரி விரட்ட, நமீபியா 177 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாயசத்தில் தோல்வியடைந்தது. கரண் கேசி,சோம்பல் கமி மற்றும் திபேந்திர சிங் ஐரீ தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். குஷால் மல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |