மூன்றுமுறை சூப்பர் ஓவர் ஆடி தோல்வி: நெதர்லாந்தை பழிதீர்த்து வெளியேற்றிய நேபாள அணி
ஸ்கொட்லாந்து முத்தரப்பு டி20 போட்டியில் நேபாள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
மைக்கேல் லெவிட் 86 ஓட்டங்கள்
டிட்வுட் மைதானத்தில் நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய நெதர்லாந்து 174 ஓட்டங்கள் குவித்தது. மைக்கேல் லெவிட் 86 (53) ஓட்டங்களும், வான் டெர் மெர்வ் 36 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய நேபாள அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஷால் பர்டெல் 65 (51) ஓட்டங்களும், ஆரிப் ஷேய்க் 39 (23) ஓட்டங்களும் விளாசினர்.
பழிதீர்த்த நேபாளம்
இந்த வெற்றியின் மூலம், மூன்று முறை சூப்பர் ஓவர் ஆடி தோல்வியுற்றதற்கு நெதர்லாந்தை பழிதீர்த்துக் கொண்டது நேபாள அணி.
மேலும், நேபாளம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்கிறது.
𝗪𝗲 𝗰𝗮𝗺𝗲 𝗵𝗲𝗿𝗲 𝗳𝗼𝗿 𝗺𝗼𝗿𝗲 🤔#kncbcricket #kncbmen #T20I #TriSeries #nepned pic.twitter.com/tu0B2kj9Cb
— Cricket🏏Netherlands (@KNCBcricket) June 19, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |