அமெரிக்காவைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தையும் சம்பவம் செய்த நேபாள அணி
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேபாள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்கொட்லாந்து ஆல்அவுட்
நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூரில் நடந்தது.
A 28-ball half-century from Brando 🔥🔥🔥 pic.twitter.com/mZB7RDj438
— Cricket Scotland (@CricketScotland) May 18, 2026
முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து 39.1 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பிரண்டன் மெக்முல்லன் 44 பந்துகளில் 73 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்), மைக்கேல் இங்கிலீஷ் 51 (72) ஓட்டங்களும் எடுத்தனர்.
லலித் ராஜ்பன்ஷி 4 விக்கெட்டுகளும், சந்தீப் லாமிச்சேன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சோம்பல் கமி, திபேந்திரா மற்றும் நந்தன் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நேபாள அணி வெற்றி
பின்னர் ஆடிய நேபாள அணி 38.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ரோஹித் பாடேல் 98 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்களும், இஷான் பாண்டே 61 பந்துகளில் 55 ஓட்டங்களும் விளாசினர்.
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்தையும் தற்போது நேபாளம் வீழ்த்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |