122 ரன் வித்தியாசத்தில் நேபாளம் அபார வெற்றி: தூள் தூளான அமெரிக்க அணி
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது.
இஷான் பாண்டே விளாசல்
அமெரிக்கா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திப்பூரில் நடந்தது.
முதலில் ஆடிய நேபாள அணி 50 ஓவர்களில் 317 ஓட்டங்கள் குவித்தது. இஷான் பாண்டே (Ishan Pandey) 84 ஓட்டங்களும், திபேந்திர சிங் ஐரீ 59 (36) ஓட்டங்களும் எடுத்தனர்.
சுபம் ரஞ்சன் 3 விக்கெட்டுகளும், ருஷில் மற்றும் மிலிந்த் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அமெரிக்க அணி தோல்வி
பின்னர் ஆடிய அமெரிக்க அணி 41.2 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 44 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.

நேபாள அணியின் தரப்பில் சந்தீப் லாமிச்சேன் 3 விக்கெட்டுகளும், குல்ஸன் ஜா, திபேந்திர சிங் மற்றும் லலித் ராஜ்பன்ஷி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
நேபாளம் 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற, இஷான் பாண்டே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |