இந்த நாட்டினர் இந்தியா வர பாஸ்போர்ட் தேவை இல்லை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இரு நாட்டை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியா வரலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேபாளம், பூட்டான்
பொதுவாக ஒரு நாட்டு குடிமகன் மற்றொரு நாட்டிற்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் ஆகும். இதில், சில நாடுகள் குறிப்பிட்ட நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது.
இந்நிலையில், இரு நாட்டு குடிமக்கள் இந்தியா வருவதற்கு விசா மற்றும் பாஸ்போர்ட் தேவை இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு சட்டம் 2025 படி, நேபாளம் மற்றும் பூடானை சேர்ந்த குடிமக்கள் இந்தியாவிற்குள் நிலம் அல்லது வான் வழியாக வருவதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவை இல்லை என தெரிவித்துள்ளது.
என்ன ஆவணம் தேவை?
இருந்தாலும், இந்தியாவிற்குள் நுழையும் பூடான் அல்லது நேபாள குடிமக்கள், அந்த நாட்டில் வழங்கப்பட்ட குடியுரிமை சான்றிதழ் அல்லது அந்த நாடுகளின் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் அவசியம் ஆகும்.
10 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி முதல்வரால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை.
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த அத்தகைய ஆவணங்கள் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |