அந்த நாட்டு ரசிகர்கள் மோசமானவர்கள் என கூறிய வீரர்! தரமான பதிலடி கொடுத்த கேப்டன்
உங்கள் நாட்டு ரசிகர்கள் மிக மோசமானவர்கள் எனக் கூறிய அமெரிக்க வீரருக்கு, நேபாள அணியின் கேப்டன் பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேபாளம், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பப்புவா நியு கினியா ஆகிய அணிகளில் மோதி வருகின்றன.
கடந்த ஜூன் 15ஆம் திகதி நடந்த போட்டியில் அமெரிக்கா 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது. இந்த நிலையில், அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர் அலி கான் பதிவிட்ட கருத்து நேபாள ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
Peter Della Penna
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேபாளி ரசிகர்கள் எப்போதும் மோசமானவர்கள்' என பதிவிட்டிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேபாள அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சனே தெரிவித்துள்ள கருத்து வரவேற்பை பெற்றுள்ளது.
Never expected such a generalized and hateful comment from one of my cricket colleagues. The people of Nepal breathe cricket. It's in their blood. And they are a critical part of cricket world map. Sports should only bring people together & not divide them. #JaiNepal?? https://t.co/V1SXbmMVwJ
— Sandeep Lamichhane (@Sandeep25) July 18, 2022
லாமிச்சனே தனது பதிவில், 'எனது கிரிக்கெட் சகாக்களில் ஒருவரிடம் இருந்து இதுபோன்ற பொதுவான மற்றும் வெறுக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நேபாள மக்கள் கிரிக்கெட்டை சுவாசிக்கிறார்கள்.
அது அவர்களின் ரத்தத்தில் உள்ளது. மேலும், அவை கிரிக்கெட் உலக வரைபடத்தின் முக்கியமான பகுதியாகும். விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும், அவர்களை பிரிக்கக் கூடாது' என தெரிவித்துள்ளார்.
Twitter