மேற்கிந்திய தீவுகளுக்கு பேரிடி கொடுத்த நேபாளம்! 180 போட்டிகளுக்கு பின் முதல் வெற்றி..புதிய வரலாறு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேபாள அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹோல்டர் 4 விக்கெட்
நேபாளம், மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டி20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில் நேபாள அணி முதலில் துடுப்பாடியது.
அணித்தலைவர் ரோஹித் பாடீல் 38 (35) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஷால் மல்லா 21 பந்துகளில் 30 ஓட்டங்களும், குல்சன் ஜா 16 பந்துகளில் 22 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் நேபாளம் 8 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. ஜேசன் ஹோல்டர் (Jason Holder) 4 விக்கெட்டுகளும், நவின் பைடைசீ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Elite with the ball!💥
— Windies Cricket (@windiescricket) September 27, 2025
Jason Holder shows his class in the 1st innings.🤩 #NEPvWI | #MenInMaroon pic.twitter.com/Pd4ONhT8LY
சாதனை வெற்றி
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேபாள பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள், 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 9 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களே எடுத்தது.
நவின் பைடைசீ (Navin Bidaisee) 22 ஓட்டங்களும், பாபியான் ஆலன் 19 (14) ஓட்டங்களும், அகேல் ஹொசைன் 9 பந்துகளில் 18 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் நேபாள அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
180 போட்டிகளில் விளையாடியுள்ள நேபாள அணி, முதல் முறையாக டெஸ்ட் தகுதியுடைய அணி ஒன்றை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
Nepal have defeated West Indies in the first T20I at Sharjah🇳🇵
— Wisden (@WisdenCricket) September 27, 2025
It is their first win against a Full Member country 👏#NEPvWI pic.twitter.com/rZlO0jZoD5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |