நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான்! 16,700 கோடி சாம்ராஜ்யம்..143 சொகுசு ஹொட்டல்கள்
பிரபல நேபாள கோடீஸ்வரர் பினோத் சௌத்ரியின் வணிக சாம்ராஜ்யம் குறித்து இங்கே காண்போம்.
பினோத் சௌத்ரி
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரராக திகழ்பவர் பினோத் சௌத்ரி (70).
இவர் முகேஷ் அம்பானியைப் போல மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உலகளவில் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவின் பிரபலன்களான டாடா, அமிதாப் பச்சன் ஆகியோரால் ஈர்க்கப்பட்ட பினோத், காத்மாண்டுவில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையால், இளம் வயதிலேயே தமது குடும்பத் தொழிலை ஏற்க வேண்டிய நிலையில் பினோத் சௌத்ரிக்கு ஏற்பட்டது. இதனால் Chartered Accountant ஆக வேண்டும் என்ற தனது கனவை அவர் கைவிட்டார்.
Wai Wai நூடுல்ஸ்
தொழிலில் ஈடுபட்ட அவர், கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் தமது குடும்ப நிறுவனத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றினார்.
நூடுல்ஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது மேகி பிராண்ட்தான். ஆனால் அதற்கு சவால் விடுக்கும் அளவிற்கு, "Wai Wai நூடுல்ஸ்" எனும் தனது பிரண்டை பிரபலப்படுத்தினார் பினோத் சௌத்ரி. அவருக்கு இந்த நூடுல்ஸ் யோசனை பிறந்தது தாய்லாந்து பயணத்தின்போதுதான்.
அதன் பின்னர் நேபாளம் தொடங்கி மிகப்பெரிய வணிக சந்தையான இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தனது பிராண்டை கொண்டு சேர்த்தார்.
2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
பினோத் சௌத்ரி நூடுல்ஸுடன் நிற்காமல் பல வணிகங்களில் ஈடுபட்டார். நேஷனல் பானாசோனிக் நிறுவனத்துடன் பணிபுரிந்த அவர், நேபாளத்திற்கு சுசுகி கார்களை கொண்டு வர உதவினார்.
மேலும் வங்கி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் கோலோச்ச தொடங்கினார். குறிப்பாக சௌத்ரி குழுமம் ஹோட்டல் தொழில் வெற்றிக் கொடியை நாட்டியது.
தற்போது இந்தக் குழுமம் உலகம் முழுவதும் 143 சொகுசு ஹொட்டல் சொத்துக்களை நிர்வகிக்கிறது.
ஃபோர்ப்ஸ் வணிக இதழின்படி, பினோத் சௌத்ரியின் சொத்து மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,700 கோடி) ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |