வரலாற்றில் முதல் முறையாக ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்ற அணி! சாதனைக்கு வித்திட்ட 17 வயது வீரர்
நேபாளம் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றது.
நேபாளம் அபார வெற்றி
ACC ஆடவர் பிரீமியர் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கிர்டிபூரின் திரிபுவன் மைதானத்தில் நடந்தது. இதில் நேபாளம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய அமீரக அணி 33.1 ஓவரில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆசிப் கான் 46 ஓட்டங்கள் எடுத்தார். நேபாளம் அணியின் தரப்பில் ராஜ்பன்ஷி 4 விக்கெட்டுகளும், கரண் மற்றும் லாமிச்சேன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Photo: ACC
ஆசியக்கோப்பைக்கு தகுதி
அதன் பின்னர் களமிறங்கிய நேபாளம் அணி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 17 வயது இளம் வீரரான குல்ஸன் ஜஹா 67 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
ICC Cricket
இந்த வெற்றியின் மூலம் நேபாளம் அணி முதல் முறையாக ஆசியக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள இந்தத் தொடரில், நேபாளம் அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் ஏ-யில் இணைந்துள்ளது.