புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கத்தார் செய்த துரோகம்... இங்கிலாந்து வீரர் ஹரி கேனுக்கு ஆசிய நாட்டவரின் கோரிக்கை
கத்தார் உலகக் கோப்பை தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர் பலர் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், இங்கிலாந்து வீரர் ஹரி கேன் தங்களுக்காக பரிந்துபேச வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பில் மொத்தம் 8 பிரம்மாண்ட அரங்கங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான குடியிருப்புகள் என கட்டுமான பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டது.
@dailymail
இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, குறைந்த ஊதியத்தில் அதிக வேலை வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
நேபாளத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி நாராயண் பிரசாத் என்பவர் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதில், கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமக்கு நாளுக்கு 10 பவுண்டுகளுக்கும் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டதாகவும், கடைசி கட்டத்தில் தமக்கான ஊதியம் உட்பட எந்த உதவியும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கால்பந்து நட்சத்திரம் ஹரி கேன்
மட்டுமின்றி, இந்த விவகாரத்தை இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் ஹரி கேன் உரியமுறையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் வளம் மிகுந்த கத்தார் நாடானது உலக அரங்கில் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதாகவும், FIFA அமைப்பானது உலகக் கோப்பை தொடரால் 3 பில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டும் எனவும் கூறப்படுகிறது.
@getty
மேலும், தற்போது ஹரி கேன் இணைந்து செயல்படும் கால்பந்து அணி நிர்வாகமானது அவருக்கு ஒவ்வொரு வாரமும் 200,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கி வருகிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஹரி கேன் மற்றும் அவரது இங்கிலாந்து அணி பரிந்து பேசியதாலையே, புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும் என நேபாளத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி நாராயண் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்கள் ஊதிய நிலுவை
நீங்கள் பரிந்து பேசுவதால், என்னைப் போன்ற பல தொழிலாளர்கள் தங்கள் ஊதிய நிலுவையை பெற வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
@dailymail
கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமான பணிகளில் ஈடுபட்ட நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை நாட்டவர்கள் சுமார் 6,500 பேர்கள் 2010 மற்றும் 2020 வரையான காலகட்டத்தில் மரணமடைந்துள்ள விவகாரம் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.