அவுட்டா? இல்லையா? குழம்பிப்போன நடுவர்கள்.. திகைக்க வைத்த வீரரின் கேட்ச்
பிக் பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர் பிடித்த கேட்ச் நடுவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
பிரிஸ்பேன் ஹீட் வெற்றி
கப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 224 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய சிட்னி அணி 209 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் ஜோர்டன் சில்க் (41) அடித்த ஷாட்டை எல்லைக்கோட்டின் அருகே நின்றிருந்த நேசர் கேட்ச் செய்தார். முதலில் கேட்சை பிடித்த அவர் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று பந்தை மேலே வீசினார்.
பின் அதை வெளியே இருந்து மீண்டும் கேட்ச் செய்தபோது அவர் உயரே எகிறி, பின் எல்லைக்கோட்டிற்குள் வந்த கேட்ச் செய்தார்.
Michael Neser's juggling act ends Silk's stay!
— cricket.com.au (@cricketcomau) January 1, 2023
Cue the debate about the Laws of Cricket... #BBL12 pic.twitter.com/5Vco84erpj
நடுவர்கள் குழப்பம்
இதனைப் பார்த்த துடுப்பாட்ட வீரர் சில்க் இது அவுட் இல்லை என்று முறையிட்டார். நடுவர்களும் குழப்பமடைந்தனர். அதன் பின்னர் அது அவுட் தான் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் துடுப்பாட்ட வீரர் சில்க் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.